

பண்பாடு, நாட்டார் வழக்காற்றியல், சமயம், தொல்லியல் போன்ற ஆய்வுத்துறைகளில் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். அவ்வகையில் வராத தொ.ப. நிகழ்த்திய உரைகளை சித்திரவீதிக்காரன், ‘நமது அறிவுச் செல்வம்’ என்ற நூலாக எழுத்து வடிவில் தற்போது கொண்டு வந்திருக்கிறார்.
தொ.ப. தன் உரையில் எது இலக்கியம்? என்ற முக்கியமான வினாவை எழுப்பியிருக்கிறார். சக மனிதன்மீது நாட்டங்காட்டச் செய்வதும் சக மனிதன்மீது அன்புகொள்ள செய்வதும்தான் இலக்கியத்தின் அடிப்படை என்கிறார்.
திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமயணம், கி.ரா.வின் ‘புறப்பாடு’, பா.செயப்பிரகாசத்தின் ‘பொய் மலரும்’ போன்ற படைப்புகளை இலக்கியங்களுக்கான சான்றுகளாகக் காட்டுகிறார்.