முதலீட்டுக் கலை | நம் வெளியீடு

முதலீட்டுக் கலை | நம் வெளியீடு
Updated on
1 min read

டிஜிட்​டல்​மய​மான இன்​றைய காலத்​தி​லும் கூட பலருக்​கும் முதலீடு​கள் செய்​யும் வழிகள் பற்​றிய புரிதல்​கள் இல்​லை. பாது​காப்​பாக முதலீடு செய்​வது எப்​படி, பங்​குச் சந்​தைப் போக்​கு​கள் குறித்த விளம்​பரங்களைத் தாண்​டிய உண்மை நில​வரம் என்ன போன்​றவற்​றி​லும் புரிதல் இல்​லை.

இவற்​றில் எல்​லாம் ஆழம் தெரி​யாமல் காலை​விட்டு சிக்​கலில் மாட்​டிக்​கொள்​பவர்​களை​யும் நாம் அன்​றாடம் பார்க்​கிறோம். விவரம் அறிந்​தவர்​களே இவற்​றில் எல்​லாம் விழுந்​து​விடு​கிறார்​கள் என்​பது​தான் சோகம்.

சோம வள்​ளியப்​பனின் ‘முதலீடு​கள்’ எனும் இந்​நூல், பணத்​தின் அரு​மையை உணர்த்​தக்​கூடியது. ஓடிஓடி உழைத்து ஈட்​டிய வரு​மானத்தை நிலைநிறுத்​திக்​கொண்டு மேலும் பல்​கிப்​பெரு​கச் செய்​யும் கலை​யை, கற்​றுத்​தரு​கிறது.

நமக்​குக் கிடைக்​கும் வரு​மானத்தை நெறிப்​படுத்​தி, சேமித்​து, முதலீடு செய்து வாழ்வை வளப்​படுத்​திக்​கொள்​வதற்​கான வழி​முறை​களை, அன்​றாட வாழ்​விலிருந்தே உதா​ரணங்​களைச் சொல்லி நூலாசிரியர் விளக்​கும் விதம் சுவை​யானவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in