

காட்சிப்படுத்தல் என்பது கவிதையின் ஓர் உன்னத உத்திமுறை. ஆனால் ஒரு கவிதையின் சிறப்பு அவ்வுத்தியை மட்டும் சார்ந்ததன்று. மாறாகக் காட்சிப்படுத்தும் பொருண்மையையும் சார்ந்ததாகும்.
படத்தொகுப்பாளரான பா. சந்துருவின் ‘மழை நின்ற மறுநாள்’ தொகுப்பை உன்னதப் பொருண்மைகள் கொண்ட காட்சிக் கவிதைகளின்குவியல் எனலாம். பெரும்பான்மையான கவிதைகள் சமூகப் பிரஞ்ஞையோடு எழுதப்பட்டுள்ளன.
அவை சமூகத்தின் உடைசல்கள்; கீறல்களைக் கைக்காட்டி நிற்கின்றன. பாலஸ்தீன போர், வேங்கைவயல், நாங்குநேரி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய கவிதைகள் சமூகத்தின், அதிகாரத்தின் சட்டையைப் பிடித்துக் கேட்கின்றன.