

பொதுவாக கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து பெரும் தியாகத்தை விலைகொடுத்து ரணப்பட்ட வாழ்க்கை முறை கொண்டதாக கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.
ஆகவே, அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிக்கும்போது மிகுந்த மனவலி ஏற்படுவது இயல்பானது. அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆரம்ப காலத் தலைவரான எஸ்ஏபி எனும் எஸ்.ஏ. பெருமாள்.