

காலங்கள் கடந்த பின்பு, அவை தந்த அனுபவத்தின் மகிழ்வை, கொண்டாட்டத்தை அல்லது மனதுக்குள் அசைந்துக் கொண்டிருக்கும் தாங்க முடியாத எதிர் மறையை, படைப்பு மனம் அசைப்போட்டு அசைப்போட்டுப் புனைவாக்கி விடுகிறது.
அவை மொழியின் லாவகத்தோடு வெளிப்படும்போது, காலத்தைக் கடந்தும் எல்லோருக்குமான ஒன்றாக, அதற்குள் நம்மை இருத்தி விடுகிறது. அப்படியான கவிதைகளைக் கொண்டத் தொகுப்பாக இருக்கிறது, சீனு ராமசாமியின் ‘மணல் உயிர்’.