

இருதிங்களிதழான ‘மானுடம்’ தனது ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததையொட்டிச் சிறப்பிதழை (சூலை - ஆகஸ்ட் 2026) வெளியிட்டிருக்கிறது.
பழங்கால ஆவணங்களில் உள்ள உணவு தொடர்பான தரவுகள் பற்றிய சுவாரசியமான கட்டுரையை எழுதியிருக்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.
மலையில் தீபமேற்றுதல், மலையைச் சுற்றி வருதல் என மலை வழிபாட்டின் தொடக்க வரலாற்றைத் தேடும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை முக்கியமான பதிவு.
சமணப் பெண் துறவிகளின் கல்விப் பணி குறித்து முனைவர் ஜா.சலேத் எழுதியிருக்கும் கட்டுரையும், மெக்காலே கல்வி முறையின் வரலாற்றுப் போக்கை விவரிக்கும் எழுத்தாளர் பாரதிபாலனின் கட்டுரையும் பெரும் திறப்பை அளிக்கவல்லவை.
அரசுக்குச் சார்பாக மக்களின் எண்ணப் போக்கைத் திசைதிருப்பும் ஊடகங்களின் முறைகேடுகளை நோம் சாம்ஸ்கி தொடர்பான ஆவணப்படம் வழி உணர்த்துகிறார் யமுனா ராஜேந்திரன்.
இதுபோன்ற பல்வேறு கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. சமூக - அரசியல் - பண்பாட்டுக் காலாண்டிதழாக தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ‘மானுடம்’ ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. - சுடராழி
மானுடம் போற்றுவோம்
இருதிங்களிதழ்
சோ. அன்சாரி
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90035 98674