முல்லைக்கு ஏன் தேர் கொடுத்தார் பாரி?

முல்லைக்கு ஏன் தேர் கொடுத்தார் பாரி?
Updated on
1 min read

கலிங்​கப்​போரில் கொடூர​மாக மாண்​டு​போன வீரர்​களின் சடலங்​களை​யும் போர் ஏற்​படுத்​திய சீரழி​வை​யும் பார்த்த அசோகர், போரைக் கைவிட்டு அமை​தி​யைப் போதிக்​கும் பௌத்​தத்​தைத் தழு​வியதற்கு ஒருபடி மேலே உயர்ந்து நிற்​கிறார் பாரி.

இந்த உலகம் மனிதர்​களுக்கு மட்​டு​மானதல்ல; சிறு சிறு புல்​பூண்​டு​கள், பூச்​சிகள், விலங்​கு​கள், பறவை​கள் உள்​ளிட்ட அனைத்து உயிர்​களுக்​கு​மானது என்​பது பாரி​யின் சிந்​தனை. அந்​தச் சிந்​தனை​யின் வழிநின்று முல்​லைக்​கொடிக்​குத் தேரை அளித்த பாரி​யின் அறம் குறித்​துச் சங்​கப் பாடல்​களின் துணை​யோடு அனை​வரும் அறி​யும் வகை​யில் கவிதை​யாக்​கி​யுள்​ளார் அறி​வும​தி. ஓவியர்​கள் ஏ.பி.தர், ரவி பேலட் இரு​வரது ஓவி​யங்​கள் கண்​ணை​விட்டு அகல​வில்​லை.

தேர் எப்​படி உரு​வாக்​கப்​பட்​டது, அதன் வேகம் என்ன, அது ஏற்​படுத்​தும் இழப்​பு​கள் என்​னென்ன என்று ஒவ்​வொன்​றாக விளக்​கிக்​கொண்டே பழந்​தமிழர் ஆண்ட காலத்​துக்கு ஆசிரியர் நம்மை அழைத்​துச் செல்​கிறார்.

தேர் என்​னும் ‘பயணக் கரு​வி’ எப்​படிக் ‘கொலைக் கரு​வி’​யாக மாறுகிறது என்​ப​தைத் தமிழ்ப் புல​வர்​களின் சொற்​கள் வழியே விளக்​கு​கிறார்.

தேர்​கள் செல்​லும் பாதை​யில் அறு​படும் கொடிகளும் கிழி​யும் இலைகளும் உதிரும் பூக்​களும் மனிதக் கொலைகளுக்கு நிக​ரானவை என நாம் கவனிக்​கத் தவறுகிற உயிர்​களின் வாதையை அறி​வும​தி​யின் கவிதை வரி​கள் வேதனையோடும் அளவற்ற பரிவோடும் உணர்த்​துகின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in