

கீரனூர் புக்ஸ் வழங்கும் 2026ஆம் ஆண்டுக்கான அமரர் சிவ.சுந்தரம் நினைவு தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருது வழங்கும் விழா தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விருதை கவிஞர் மதார் பெறுகிறார். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் விருதினை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மங்கையர்க்கரசி ப்ரகாஷ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா, வெ.ஜீவகுமார், துருவம் சாமிநாதன், சுரேஷ் பிரதீப், நேசன், காளி ப்ரஸாத், ஜி.பி.இளங்கோவன் உள்ளிட்ட படைப்பாளிகள் உரையாற்றுகின்றனர்.