

வ.அய்.சு. நூற்றாண்டு கருத்தரங்கம்: பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 18-02-2026 நடைபெறுகிறது. நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலும், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வே.இராஜாராமன் முன்னிலையிலும் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், பேராசிரியர்கள் பா.ரா.சுப்பிரமணியன், கி.நாச்சிமுத்து, இரா.கோதண்டராமன், வீ.அரசு, முனைவர் ம.இராசேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். மாலை 4 மணிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உரையாற்றுகிறார்.