நேருவின் ‘உலக சரித்திரம்’ நூல் வெளியீடு - ‘இந்திரா காந்தி அரிய புகைப்பட வரலாறு’ நூலின் முன்பதிவு திட்டம் தொடக்கம்

நேருவின் ‘உலக சரித்திரம்’ நூல் வெளியீடு - ‘இந்திரா காந்தி அரிய புகைப்பட வரலாறு’ நூலின் முன்பதிவு திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலைமை அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்தி பவனில் முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு சிறை​யில் இருந்து எழு​திய கடிதங்​களின் தொகுப்​பான ‘உலக சரித்​திரம்” நூல் வெளி​யிடப்​பட்​டது.

முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு சிறை​யில் இருந்து எழு​திய கடிதங்​களின் தொகுப்​பான ஆங்​கில நூலை, முன்​னாள் மத்​திய அமைச்​சர் ஓ.வி.அழகேசன் தமிழில் மொழிபெயர்த்த ‘உலக சரித்​திரம்’ என்ற நூல் வெளி​யீட்டு விழா சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தமிழக காங்​கிரஸ் தலைமை அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்தி பவனில் நடை​பெற்​றது.

இந்த நிகழ்​வுடன், தமிழக காங்​கிரஸ் துணைத் தலை​வர் ஆ.கோபண்ணா தொகுத்து எழு​தி, வரும் நவம்​பர் 19-ம் தேதி வெளி​யிடப்​பட​வுள்ள ‘இந்​திரா காந்​தி​யின் அரிய புகைப்பட வரலாறு’ என்ற நூலின் முன்​ப​திவு திட்ட தொடக்க விழா​வும் இணைந்து நடத்​தப்​பட்​டது.

இந்த விழாவுக்கு தலைமை தாங்​கிய தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் நேரு​வின் ‘உலக சரித்​திரம்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலை வெளி​யிட, தமிழக சுற்​றுலாத்​துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் பெற்​றுக்​ கொண்​டார்.

தொடர்ந்​து, ‘இந்​திரா காந்​தி​யின் அரிய புகைப்பட வரலாறு’ நூலின் முன்​ப​திவு திட்​டத்​தையும் மாணிக்​கம் தாகூர் தொடங்கிவைத்​தார். நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற மதி​முக பொதுச்​செயலர் வைகோ பேசும்​போது, “உலக சரித்​திரம் நுாலை, மாணவர்​கள், அரசி​யல்​வா​தி​கள் படிக்க வேண்​டும்” என்​றார்.

கோபண்ணா பேசும்​போது, “ராஜீவ்​காந்தி குறித்​தும், தமிழக காங்​கிரஸ் வரலாறு குறித்​தும் நுால்​கள் எழுத இருக்​கிறேன்” என்​றார். கோபண்ணா டெல்​லி​யில் தங்​கியிருந்து இந்​தி​ரா​வின் அரிய புகைப்​படங்​களை சேகரித்த பணி பாராட்​டுக்​குரியது” என அமைச்​சர் ராஜேஷ் கு​மார் தெரி​வித்​தார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்​ப​ராயன், விசிக எம்.பி. ரவிக்​கு​மார், காங்​கிரஸ் எம்.பி.க்​கள் சசி​காந்த் செந்​தில், விஜய்​வசந்த், தமிழக காங்​கிரஸ் எஸ்சி பிரிவு தலை​வர் ரஞ்​சன்​கு​மார் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​றனர்.

நேருவின் ‘உலக சரித்திரம்’ நூல் வெளியீடு - ‘இந்திரா காந்தி அரிய புகைப்பட வரலாறு’ நூலின் முன்பதிவு திட்டம் தொடக்கம்
அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in