

காலச்சுவடு பதிப்பகம் சார்பில், ‘கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்’ நூல் அறிமுக நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பதிப்பாசிரியர் உரையை பழ.அதியமான் வழங்கிட, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார்.
கு.அழகிரிசாமியின் இளைய மகள் பாரதி விஸ்வேஸ்வரன் வரவேற்புரையாற்றுகிறார். புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் நூலை வழங்கிட, தொ.மு.சி.ரகுநாதனின் இளைய மகள் மஞ்சுளா நூலைப் பெற்றுக்கொள்கிறார். கு.அழகிரிசாமியின் மூத்த மகள் ராதா நன்றியுரையாற்றுகிறார்.