

ஒரு சாகச நாயகனின் வசீகரத்தோடு வாழ்ந்த ரஷ்ய முன்னோடி எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின். கேப்டன் மகள், ஸ்பேடுகளின் ராணி போன்ற நாவல்கள், வெண்கலக் குதிரைவீரன் உள்ளிட்ட கவிதைகள் போன்ற அவரின் படைப்புகள் புகழ்பெற்றவை.
புஷ்கின் மீது அளவற்ற பிரியம் கொண்ட ஒருவர், புஷ்கினின் பாணியிலேயே புஷ்கினைப் பற்றியே எழுதியிருக்கும் குறுநாவல்தான், ‘கறுப்பு ஆறு’ (புஷ்கின் கோப்புகள்). இதுவரை மொழிபெயர்ப்பைத் தனது அடையாளமாகக் கொண்டுள்ள கே. கணேஷ்ராம் எழுதியுள்ள முதல் புனைவான இது, புஷ்கின் எழுதிய ‘பெல்கின் கதைகள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை நினைவூட்டுகிறது; கதைக்குள் கதை என்கிற புஷ்கினின் உத்தியைக் கொண்டுள்ளது.