

ஏ.ஆர்.பி.ஆரோக்கியதாஸ் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் பெரும்பாலும் பள்ளி நினைவுகள், கிராமிய வாழ்க்கை, மனிதநேய உணர்வுகள், அன்றாடம் கண்ணில் படுகிற காட்சிகள் ஆகியவையே ஆகும்.
இவை நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. பள்ளிக்கூட வாசலில் பேனாக்கள் விற்கும் சிறுவனைப் பற்றிய கவிதை ஒன்று. அவனுக்கு படிக்கத் தெரியாது. மற்ற பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த சிறுவியாபாரம்.