தமிழ் அன்​பர்​களுக்கு ஓர் இலக்​கி​யத் துணைவன்​..! | நூல் வெளி

தமிழ் அன்​பர்​களுக்கு ஓர் இலக்​கி​யத் துணைவன்​..! | நூல் வெளி
Updated on: 
1 min read

கம்​பரின் இலக்​கியப் பார்​வை​யும் கவிதைப் பேராற்​றலும் நிலத்​தினும் பெரிது. வானினும் உயர்ந்​தது. நீரினும் ஆரள​வில்​லாதது. வடமொழி​யும்

தென்​தமிழும், மறை​கள் நான்​கும் கற்​றுணர்ந்த கம்​பர், தனக்கு முன்​னிருந்த தமிழிலக்​கி​யங்​களில் மூழ்கி முத்​தெடுத்​தவர்.

கம்​பரின் இராம​காதைப் பாடல்​களை, ‘கம்​ப​ரா​மாயணம் அருங்​கவி அமுதம்’ என்ற தலைப்​பில் இரண்டே தொகுப்​பு​களாக, கையடக்க நூலாக வெளி​யிட்​டுள்​ளார் பேராசிரியர் ப.சுப்​பிரமணி​யன். பத்​தா​யிரத்​துக்​கும் மேற்​பட்ட பாடல்​களில் இருந்து தெரிவு செய்​யப்​பட்ட 1,915 செய்​யுள்​களும் அவற்​றுக்​கான உரை​விளக்​க​மும் இந்​நூலில் இடம்​பெற்​றுள்​ளன.

நூலின் முதல் பாகத்​தின் தொடக்​கத்​தில், ‘கம்​ப​ரா​மாயணம் நூலமைப்​பும் சிறப்​பும்’ என்​னும் தலைப்​பில் ஒரு கட்​டுரை விரி​வாக அமைந்​துள்​ளது. இதனுள் கம்​பர் - பெயர்க்​காரணம், ஆதரித்த வள்​ளல், கவிக்​கூற்​று, பாத்​திரக் கூற்​று, புலமை நலம், சொல்​லாட்​சி, கம்​பரின் காலம் போன்ற உட்​தலைப்​பு​களின் கீழ் செய்​தி​கள் விவரிக்​கப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in