

அதிகாலையில் கூவும் சேவல்களையும் அந்தி சாயும்பொழுது கூடடையும் புள்ளினங்கள் யாவையும் இரவின் இயக்கங்களையும் கதிரவனின் கதிர்கள் விரிந்து சுருங்கும் இடையுலக வாழ்க்கையையும் கண்டு ரசிக்காமலேயே கடந்து கொண்டிருக்கிறோம்.
இயற்கையோடு பேசுவதற்கு நேரங்களைக் கொடுப்பதில்லை. கான்கிரீட் கட்டடங்களுக்குள் கணினி யுகத்தில் மனித வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. அதனை வாழ்வென்று சொல்லிவிட முடியாது.