

கணிதத்துறைக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு பரவலாக அறியப்படாதது. இந்த நூல் 8 - 14ஆம் நூற்றாண்டுகளில் அரபு நாடுகளில் தோன்றிய 28 கணித மேதைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறது.
அல் கவாரிச்மி என்பவரைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இவரால் அடித்தளம் அமையப்பெற்ற அல்ஜீப்ரா குறித்துத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஈராக்கைச் சேர்ந்த இவர் அரபு மொழியில் எழுதிய நூல்தான் இயற்கணிதம் என்கிற அல்ஜீப்ரா தோன்ற வழிவகுத்தது.