

டிஜிட்டல்மயமான இன்றைய காலத்திலும் கூட பலருக்கும் முதலீடுகள் செய்யும் வழிகள் பற்றிய புரிதல்கள் இல்லை. பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பங்குச் சந்தைப் போக்குகள் குறித்த விளம்பரங்களைத் தாண்டிய உண்மை நிலவரம் என்ன போன்றவற்றிலும் புரிதல் இல்லை.
சோம. வள்ளியப்பனின் ‘முதலீடுகள்’ எனும் இந்நூல், பணத்தின் அருமையை உணர்த்தக்கூடியது. ஓடி ஓடி உழைத்து ஈட்டிய வருமானத்தை நிலைநிறுத்திக்கொண்டு மேலும் பல்கிப்பெருகச் செய்யும் கலையைக் கற்றுத் தருகிறது.