

இன்று ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையும் முக்கியமான சுற்றுலாத் தலமாகிவிட்டது. அதனால் இந்த அழகிய மேற்குத் தொடர்ச்சி மலையில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது.
சுற்றுலாவுக்குச் செல்லும்போது கிடைக்கும் அதே மகிழ்ச்சியை அங்கேயே வாழ்பவர்களுக்கு வால்பாறை வழங்குவது இல்லை.
வால்பாறையில் வசிக்கும் வன விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள், தேயிலைத் தோட்டங்கள், அணைகள், கோயில்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், அங்கு வசிக்கும் மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல், பெண்களின் நிலை என அனைத்தையும் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த நூல்.
வால்பாறையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள். அவர்களின் மொழி, உணவு முறை, பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததிலிருந்து இன்று ஓரளவு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது.
என்றாலும் இன்றும் அந்த மக்களின் துயர் தீர்ந்துவிட்டதாகச் சொல்ல முடியாது என்பதையும் இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. ஏராளமான ஒளிப்படங்களுடன் இருப்பது கூடுதல் சிறப்பு.
வால்பாறை
ஜே.ஆர்.லட்சுமி
கெவின் கார்கி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840606462