தொழிற்சங்க முன்னோடியின் வரலாறு

தொழிற்சங்க முன்னோடியின் வரலாறு
Updated on
1 min read

வங்கி நிர்​வாகங்​களின் தொழிலா​ளர் விரோதப் போக்​கினை எதிர்த்து அகில இந்​திய வங்கி ஊழியர் சங்​கம் 1946இல் பிர​பாத்​க​ரால் தோற்​று​விக்​கப்​பட்​டது. அவரைத் தொடர்ந்து எச்​.எல். பர்​வா​னா, சுரேஷ் பால் போன்ற முன்​னோடிகளின் வழித்​தோன்​றலாக இடம் பெறு​பவர் தாரகேஷ்வர் சக்​கர​வர்த்​தி.

கிழக்கு பாகிஸ்​தானில் (இன்​றைய வங்​க தேசம்​) லட்​சுமிபூர் என்​கிற சிறு நகரத்​தில் 1926ஆம் ஆண்டு பிறந்​தார் தாரகேஷ்வர். டாடா​வின் நிர்​வாகத்​தில் இருந்த சென்ட்​ரல் பேங்க் ஆப் இந்​தி​யா​வில் 1945ஆம் ஆண்டு சேர்ந்​தார்.

தனது 77ஆம் வயதில் 2003இல் இறக்​கும் வரை தொழிற்​சங்​கப் பணி​களை மேற்​கொண்​டார். வங்கி நிர்​வாகத்​துடன் திறமை​யாகப் போராடி, தொழிலா​ளர் வாழ்​வில் திருப்​பு​முனை​யாக அமைந்த இரு தரப்பு ஒப்​பந்​தங்​களை வெற்​றிகர​மாக நிறைவேற்​றி​னார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in