

கடந்த 40 ஆண்டுகளாக மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கான பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் சி.ராமலிங்கம் எழுதியுள்ள ‘உங்கள் பாட்டன் சொத்தல்ல பூமி’ என்ற நூலின் தலைப்பே வாசிப்பவர்களின் சிந்தனையில் ஒரு மின்னலை ஏற்படுத்துகிறது.
“பூமி நமக்குச் சொந்தமானது” என்ற மனிதகுலத்தின் ஆதிக்கச் சிந்தனையை வேரோடு பிடுங்கி எறியும் ஒரு சூழலியல் அறைகூவல் என இந்நூலைச் சொல்லலாம்.
“நாம் எத்தகைய முன்னோர்களாக இருக்கப் போகிறோம்?” என்ற ஒற்றைக் கேள்வியின் மூலம், ஒவ்வொரு வாசகரையும் பூமியின் ‘உரிமையாளர்’ என்ற நிலையிலிருந்து அதன் ‘பாதுகாவலர்’ என்ற நிலைக்கு மாற்ற இந்நூல் முயல்கிறது.
உங்கள் பாட்டன் சொத்தல்ல பூமி
சி.ராமலிங்கம்
‘இந்து தமிழ் திசை’ வெளியீடு
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562