

ஐரோப்பிய மொழிகளில் எம்மொழி பயில்வோரும் கிரேக்கம், இலத்தீன் மொழிகளின் இலக்கிய, இலக்கண அறிவையும் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதப்பட்டு வருவதை இந்நூல் தெரிவிக்கிறது.
அங்குள்ள மொழிகளில் இவ்விரண்டும் உயர்தனிச் செம்மொழிகளாகும். அத்தகைய சிறப்புமிக்க கிரேக்கத்தின் இலக்கியங்களையும் அவற்றில் இயங்கிவந்த பண்டைய காப்பியக் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தன்னுணர்ச்சிப் பாடலாசிரியர்கள் எனப் பலரின் படைப்புகளில் புலப்படும் பாவகைகள், கருத்துக்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.