கொள்கையைப் புரட்டிப் போட்ட டார்வின் | நூல் நயம்

கொள்கையைப் புரட்டிப் போட்ட டார்வின் | நூல் நயம்
Updated on
1 min read

டார்வின் என்​றதும் பீகில் கப்​பல் பயண​மும் பரிணா​மக் கோட்​பாடும்​தான் நினை​வுக்கு வரும். நமக்​கெல்​லாம் நன்​றாக அறி​முக​மான அறி​விய​லா​ளர் என்​றாலும் டார்​வினைப் பற்​றிய வேறு விஷ​யங்​களை நாம் அதி​கம் அறிந்​த​தில்​லை.

அதற்​குப் போது​மான நூல்​கள் தமிழில் இல்லை என்​கிற குறையைப் போக்​கும் விதத்​தில் நன்​மாறன் திரு​நாவுக்​கரசு எழு​திய ‘டார்​வின்’ நூல் வெளிவந்​திருக்​கிறது. பெரும்​பாலான பெற்​றோரைப் போலவே டார்​வினின் தந்​தை​யும் மருத்​து​வ​ராகவோ பாதிரி​யா​ராகவோ டார்​வின் வரவேண்​டும் என்று நினைத்​தார்.

ஆனால், டார்​வினோ சின்ன வயதிலிருந்தே இயற்​கை​யின் மீது நாட்​டம் கொண்​டிருந்​தார். சமயம் படிப்​ப​தை​விட மருத்​து​வம் படிக்​கலாம் என்று முடி​வெடுத்​தார். ஆனால், மருத்​து​வம் அவர் இயல்​புக்கு ஒத்​து​வர​வில்​லை. அதனால் வேறு வழி​யின்றி சமயம் படிக்க கேம்ப்​ரிட்ஜ் பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்​தார். அங்​கும் அவரால் மனம் ஒன்​றிப் படிக்க இயல​வில்​லை.

அது சமயம் குறித்​தும் கடவுள் குறித்​தும் கேள்வி கேட்​கும் கால​மாக இருந்​தது. டார்​வினுக்​குள்​ளும் அந்​தக் கேள்வி வந்​தது. பதில் தேடிப் பல்​வேறு அறிஞர்​களைச் சந்​தித்​தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in