

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி என்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். ஆனால், நடை முறையில் இந்த பலன் சாதாரண மக்களுக்கு எந்த அளவுக்கு சென்று சேருகிறது என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் மோசஸ் பிரபு தொகுத்துள்ள ‘கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்’ என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடப்பு காலத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அவை யாருக்குப் பலனளிக்கின்றன என்பதைப் பற்றி பேசுகின்றன.