உருமாறிய சரித்திர நிகழ்வுகள் | சென்னை புத்தகத் திருவிழா 2026
உயிரோட்டமான வனக்காட்சிகள்
தென்னிந்தியக் காடுகளில் நாம் அறிந்த, அறிந்திராத உயிரினங்கள் ஏராளம். இந்நூலில் 70க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பற்றி பேசுகிறார் நூலாசிரியர். அவை மிகவும் அரிதானத் தகவல்களாக இருக்கின்றன. காய்ந்துபோன ஆற்றுப்படுகை அடியில் உள்ள நீரோட்டத்தை யானைகள் கண்டுபிடித்துவிடும். காலால் தரையை உதைத்து நாலைந்து அடி ஆழத்தில் ஊற்றுநீரை தோண்டி யானைகள் அருந்தும் எனத் தெரிவிக்கிறார் அவர். நமது மாநிலத்தின் வண்ணத்துப்பூச்சியாக 'தமிழ் மறவன்' என்ற வண்ணத்துப்பூச்சியைக் சொல்லும் நூலாசிரியர், தமிழகத்தில் 325 வகை வண்ணத்துப்பூச்கிள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். புத்தகத்தைப் புரட்டப் புரட்ட பறவைகள், விலங்குகள் நிறைந்த உயிரோட்டமான வனக்காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது இந்த நூல்.
சில்லென்று பூத்த காடு
மோகன ரூபன்
கற்றளி பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 7397334916
