ஒரு இனக்குழுவின் நூற்றாண்டுக் குமுறல் | நூல் நயம்

ஒரு இனக்குழுவின் நூற்றாண்டுக் குமுறல் | நூல் நயம்
Updated on
1 min read

தமிழில் குறிப்​பிட்ட இனக்​குழு​வின் வாழ்​வை, சமூக நீ​திக்​கான முன்​னெடுப்​பை, கடந்​த​கால வரலாற்​றை, நிகழ்​கால எதிர்​கொள்​ளல்​களை விவரிக்​கிற நூல்​கள் வெகு சில​வே. அவற்​றில் ஒன்​றாக, நாவிதர்​கள் என்​றழைக்​கப்​பட்ட சவரத்​ தொழிலா​ளர்​கள் தனிமனிதர்​களாக​வும் இனக்​குழு​வாக​வும் எதிர்​கொண்ட இன்​னல்​களைப் பேசுகிறது, அகநி வெளி​யீ​டாக வந்​திருக்​கும் ‘சவுரிக் கூந்​தல்’.

திருத்​தணி வட்​டாரத்​துக் கிராமங்​கள், முடி திருத்​துதலைக் குலத்​தொழிலாகச் செய்​து​வருபவர்​களின் மனநிலை, அவர்​களில் சிலர் வாத்​தி​யக்​காரர்​களாக மண விழாக்​கள்,கோயில் திரு​விழாக்​களில் இசைக்​கிற வாய்ப்பை எதிர்​பார்த்​திருத்​தல், பொதுச்​ சமூகம் அவர்​களை நடத்​துகிற விதம் போன்​றவற்​றோடு பெருநகரத்​துச் சூழல் வழங்​கு​கிற ஆசு​வாசம், புதிய வாய்ப்​பு​கள் போன்​றவற்​றைப் பேசுகிறது இந்​நூல்.

இதனை எழு​தி​யிருக்​கும் ஜில்​லேள்ள பாலாஜி திருத்​தணி வட்​டாரத்​தில் பிறந்து வளர்ந்​தவர். தான் கண்ட, கேள்​விப்​பட்ட, உணர்ந்த வாழ்​வினை இந்​நூலின் ஒவ்​வொரு பக்​கத்​தி​லும் இழைய​விட்​டிருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in