வரலாறும் கலையும் இயைந்த பிரதிகள் | நூல் வெளி

வரலாறும் கலையும் இயைந்த பிரதிகள் | நூல் வெளி
Updated on
2 min read

தமிழ் தலித் இலக்​கி​யத்​தின் முன்​னோடி​யும் இலங்​கை​யின் இடது​சா​ரித் தலை​வர்​களில் ஒரு​வரும் சாதி​யொழிப்​புப் போராட்​டக் களத்​தின் முன்​னணி​யில் நின்​றிருந்​தவரு​மான எழுத்​தாளர் கே. டானியல் அவர்​களின் நூற்​றாண்டு இது. இதையொட்டி அவரது ஆறு நாவல்​களை ‘கருப்​புப் பிரதிகள்’ பதிப்​பகம் திருத்​த​மான செம்​ப​திப்​பு​களாக வெளி​யிட்​டிருக்​கிறது.

‘பஞ்​சமர்’, ‘அடிமை​கள்’, ‘கோ​விந்​தன்’, ‘தண்​ணீர்’, ‘பஞ்ச கோணங்​கள்’, ‘கானல்’ ஆகிய ஆறு நாவல்​களதும் முதன்​மைக் கதா​பாத்​திரங்​கள் தலித்​துகள். நாவல்​களின் களம் தலித் மக்​களின் வாழ்​வியலும் வாழ்​தலுக்​கான போராட்​ட​மும்.

இந்த ஆறு நாவல்​களை​யும் ‘பஞ்​சமர் வரிசை நாவல்​கள்’ என கே. டானியல் பெயரிட்​ட​தற்கு ஆழமான காரண​முள்​ளது. ஒரு நாவல் ஒரு காலக்​கட்​டத்​தைச் சொன்​னால், அதன் தொடர்ச்​சி​யாக அடுத்த நாவல் அடுத்த கால​க்கட்​டத்​தைச் சொல்​கிறது.

ஒவ்​வொரு நாவலிலும் ஒவ்​வொரு தலித் சாதி மக்​களின் வாழ்வு மைய​மாகச் சொல்​லப்​படு​கிறது. இதன் வழி​யாக இருப​தாம் நூற்​றாண்டு இலங்​கைத் தலித் மக்​களது வாழ்​வின் வரைபடம் வாசகர் முன்னே இருளும் ஒளி​யு​மாக விரி​கிறது.

தனது மரணம்​வரை, ஏறத்​தாழ ஐம்​பது வருடங்​கள் தொடர்ச்​சி​யாகச் சாதி​யொழிப்​புக் களத்​தில் நின்​றிருந்த கே.​டானியல் தனது போராட்ட வாழ்​வில் சாதி வெறியர்​களின் துப்​பாக்​கிச் சூட்​டை​யும் தலைமறைவு வாழ்​வை​யும் சிறையை​யும் எதிர்​கொண்​ட​வர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in