மனங்கவரும் உரைவீச்சுகள்

மனங்கவரும் உரைவீச்சுகள்
Updated on
1 min read

புதுக்​க​விதைகள் புது​வேகத்​துடன் பாய்ந்​து​வந்த காலம் ஒன்​றிருந்​தது. ‘வானம்​பாடி’ புதுக்​க​விதைகள் ஒரு​புற​மும் ‘எழுத்​து’, ‘கசடத​பற’ புதுக்​க​விதைகள் இன்​னொரு புற​மு​மாக நடை​போட்​டன.

மரபுக்​க​விதைகள் மங்​கத் தொடங்​கிய​போது, ‘உரைவீச்​சுகளும்’ மேலோங்​கத் தொடங்​கியது. யாப்​பிலக்​கணம் இன்​றி, கருத்​துகளை நறுக்குத் தெறித்​தாற்​போன்று எழுது​வதற்​கான வடிவம் அது.

இந்​நூலாசிரியர், அந்த உரைவீச்​சுகளில் சமூகச் சிந்​தனை​கள், மனிதநே​யம், மதநல்​லிணக்​கம் எனப் பல பொருண்​மை​களில் எழு​தி​யுள்​ளார். பொது​வாழ்​வில், உன்னத நெறிநின்ற காந்​தி, வ.உ.சி., பெரி​யார், பாரதி ஆகியோரைப் பற்​றியெல்​லாம் எழுச்​சிமிக்க பாக்​கள் இதில் உள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in