

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ எழுதியுள்ள 123வது நூல். மனித சமூகம் நிலவிலும் செவ்வாயிலும் குடியிருப்புகளை அமைப்பது பற்றியும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்ப்பது பற்றியும் கனவு கண்டு கொண்டிருக்கும் இக்காலத்தில், விண்வெளித் துறையில் நிகழ்ந்து வரும் பிரம்மாண்டமான பாய்ச்சல்களை இத்தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது காலத்தின் தேவையாகிறது.
செயற்கை உயிரியல் இலை மூலம் ஆக்சிஜன் தயாரிப்பது, நிலவின் மண்ணில் தாவரங்களை வளர்ப்பது, பிரபஞ்சத்தின் இருண்ட பொருளை ஆராய நிலத்தடியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஆய்வகம் என நவீன அறிவியலின் எல்லைகளை இந்நூல் விரிவாகக் காட்சிப்படுத்துகிறது.
எலான் மஸ்க்கின் சிவப்பு நிற டெஸ்லா கார் விண்வெளியில் சூரியனைச் சுற்றி வரும் வரலாற்றுச் சம்பவம் தொடங்கி, செவ்வாயில் பறந்த இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர், அங்கே ஆக்சிஜனைப் பிரித்தெடுத்த மோக்சி கருவி, நிலவின் மறுபக்கத்தில் பருத்தி விதையை முளைக்கச் செய்த சாதனை வரை அனைத்தையும் மிகச் சுவாரசியமான கதையாடலாக ஆசிரியர் இதில் பதிவு செய்துள்ளார்.