ஜன​நாயகத்​தின் உயிர்க்​காற்று | நூல் வெளி

ஜன​நாயகத்​தின் உயிர்க்​காற்று | நூல் வெளி
Updated on
1 min read

இந்​திய அரசி​யல் சாசனம் , 1949 நவம்​பர் 26 அன்று நமக்கு நாமே நிறைவேற்​றிக் கொண்ட மகத்​தான உறு​தி​மொழி. முகப்​புரை​யின் விழு​மி​யங்​களை முழு​மை​யாகப் புரிந்​துகொண்டு, நடை​முறைப்​படுத்​தி​னால், அனைத்து குடிமக்களும் சமூக நீதி​யைப் பெற முடி​யும்; பொருளா​தார நீதியை நிலை​நாட்ட முடி​யும்; அரசி​யல் நீதியை அனை​வருக்​கும் பொது​வாக்க முடி​யும்.

எண்​ணி​யதை அச்​சமின்றி வெளிப்​படுத்த முடி​யும். நமது நம்​பிக்​கை​யை​யும் உரிமை​களை​யும் சிதைக்க யாரும் துணிய முடி​யாது. ஒவ்​வொரு​வரும் தங்​கள் மனச்​சாட்​சி​யின்​படி தெய்​வத்தை வணங்கி மகிழலாம்.

சம வாய்ப்​பும் சமத்​து​வ​மும் பூத்​துக் குலுங்​கும் நந்​தவன​மாக நாடு மலரும். மக்​களாட்​சி​யின் மாண்​பைப் படிப்​படி​யாக விரிவுபடுத்​து​வதற்​குப் பதிலாக, தேர்​தல் அரசி​யல் என்ற குடு​வைக்குள் சுருக்​கி​விட்டோம். குடிமக்​களே அரசின் அடிப்​படை அங்​கம் என்ற உண்மை மறக்​கடிக்​கப்​பட்​டு​விட்​டது.

குடிமக்​கள் யானை பலம் பொருந்​தி​ய​வர்​கள்; ஆனால், அரசி​யல்​வா​தி​கள் தங்கள் கையி​லிருக்​கும் அங்​குசம் என்​னும் அதி​காரத்​தைப் பயன்​படுத்தி மக்​களைக் கட்​டுக்​குள் கொண்​டு ​வந்​து, பயனாளி​களாக மாற்​றி​விட்​டார்​கள் என்​கிறார் நூலாசிரியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in