

பெற்றோரை இழந்த சிறுமி ஹைடி, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் தன்னந்தனியாக வசிக்கும் முரட்டுத் தாத்தாவிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.
மலைக் கிராமத்தினரால் ஒதுக்கப்பட்ட அந்தத் தாத்தாவின் மன இறுக்கம் ஹைடியின் அப்பழுக்கற்ற அன்பால் லேசாகிறது. இனிமையான மனிதராக அவர் மலர்கிறார்.
மேய்ச்சல் சிறுவன் பீட்டர், அவனது ஆடுகள், பனிபடர்ந்த மலை முகடுகள், அங்குக் கொஞ்சும் முகில்களுக்கு இடையில் ஹைடி வளர்கிறாள். எதிர்பாராமல், ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகருக்கு அனுப்பப்படுகிறாள்.