பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்?

பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்?
Updated on
1 min read

பெண்​ணடிமைத்​தனம் இடைக்​காலத்​தில் திடீரென முளைத்​து​விட​வில்​லை. அது மரபின் பெய​ரால் வழி​வழி​யாகக் கடத்​தப்​பட்டு நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளது என்​பதை இலக்​கியச் சான்​றுகளோடு நிறு​வி​யுள்​ளார் பேராசிரியர் பிரேமா அருணாசலம்.

தொண்​ணூறுகளின் தொடக்​கத்​தில் இவர் எழு​திய கட்​டுரைகள் முப்​பது ஆண்​டு​கள் கடந்​தும் நம் பெண்​ணுரிமைப் பார்​வையை விரி​வாக்க உதவு​கிறது.

பெண்​கள் தலைமையேற்று வழிநடத்​திய தாய்​வழிச் சமூகம் சொத்​துடைமைச் சமூக​மாக மாறிய​போது துளிர்​விட்ட பெண்​ணடிமைத்​தனம், இலக்​கி​யத்​தா​லும் பக்​தி​யாலும் மரபாலும் சமயச் சடங்​கு​களாலும் போற்றி வளர்க்​கப்​பட்​டது.

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்​காப்​பி​யத்​தில் தொடங்கி சங்க இலக்​கி​யங்​கள், சிலப்​ப​தி​காரம் எனக் கடந்து இறு​தி​யில் இராமலிங்​கரின் திரு​வருட்பா வரை காலக்​கிரம வரிசை​யாகப் பிரித்​துக்​கொண்டு பெண்​களின் அக, புற நிலைகளை விவரிக்​கிறார் பேராசிரியர் பிரே​மா.

எல்​லாக் காலங்​களி​லும் குறிப்​பிட்ட சில விஷ​யங்​களில் ஒற்​றுமை நில​வு​கிறது. கற்​பு, கைம்​மைக் கோலம், பரத்​தமை ஒழுக்​கம் போன்​றவை பெண்​களுக்​கான இலக்​கண​மாக​வும் வீரம், பலதார மணம் போன்​றவை ஆண்​களின் இயல்​பாக​வும் போற்​றப்​பட்டு அந்​தந்த கால மக்​களால் ஏற்​றுக்​கொள்​ளப்​படுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in