சொற்​சிக்​க​னமே பலம்

சொற்​சிக்​க​னமே பலம்
Updated on
1 min read

குறுங்​க​விதை அளவுக்​குத் தலைப்பு கொண்ட கவிதைப் புத்​தகங்​களுக்கு மத்​தி​யில் சிறு தலைப்​பு​கள் போலக் கவிதைகளைக் கொண்​டிருக்​கிறது கோ.வசந்​தகு​மாரனின் ‘பி​யானோ மீது கல்​லெறிந்​தா​லும் இசை பிறக்​கும்’. ஒரு மீச்​சிறு ‘டைரி’க் குறிப்பு போல இருக்​கின்றன பெரும்​பாலான கவிதைகள். அனைத்​தும் ஆசிரியரின் அந்​தந்த கணத்து உணர்​தலாகத் தெரி​கின்​றன.

அவற்​றில் எள்​ளல், எரிச்​சல், பரி​காசம், ரௌத்​திரம், நெகிழ்ச்​சி, மயக்​கம் எனப் பல உணர்​வு​கள் தென்​படு​கின்​றன. ‘நில​வில் மனிதன் கால் வைத்​தான்; இனிமேல்​தான் கை வைப்​பான்’ என்பன போன்ற சில, பொதுநலம் பாராட்​டு​கின்​றன.

‘தின​மும் குளி, ஏசி அறை​யில் உறங்​காதே, குழந்​தைமையை ரசி’ என்று அறி​வுரை சொல்​வதற்​குப் பதிலாகச் சில கவிதைகளைத் தந்​திருப்​பது ‘அட’ சொல்ல வைக்​கின்​றன. சொற்​சிக்​க​னம் மிக அதி​கம் என்​ப​தால் ‘சு​மார்’ என்று எதை​யும் எளி​தில் சொல்​லி​விட முடிவ​தில்​லை. கவிதைகளில் நிறைந்​திருக்​கிற எளிமையே அதற்​குக் காரணம்​.

பியானோ மீது கல்லெறிந்தாலும்

இசை பிறக்கும்

கோ.வசந்தகுமாரன்

தமிழ் அலை பதிப்பகம்

விலை: ரூ.150

போன்: 7708597419

சொற்​சிக்​க​னமே பலம்
மனித உறவுகளின் மேன்மையைப் பேசும் கதை
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in