இந்தியாவில் நடைமுறைவாதத்தின் கதை | நம் வெளியீடு

இந்தியாவில் நடைமுறைவாதத்தின் கதை | நம் வெளியீடு
Updated on
1 min read

கடந்த 2004ஆம் ஆண்​டில் முனை​வர் பட்ட ஆய்​வாள​ராக, ஜான் டூயி​யின் தத்​து​வத்​தில் ஆழமாக மூழ்​கி​யிருந்​தேன். கருத்​தரங்​கம் ஒன்​றில் பங்​கேற்​ற​போது, டூயி​யின் இந்​திய மாணவ​ரான பீமா​ராவ் அம்​பேத்​கர் குறித்து எனக்கு என்ன தெரி​யும் என்​கிற கேள்​வியை அமெரிக்​கத் தத்​துவ அறிஞர் மாத்​தநஸ்​பாம் எழுப்​பி​னார்.

அம்​பேத்​கர் குறித்து அதி​கம் சொல்​லத் தெரி​யாதவ​ராய் அன்று நான் வெறுமனே முணு​முணுத்​தேன். ஆனாலும், இதற்​கான விடைகள் டூயி​யின் சிந்​தனை​யில் இருப்​ப​தாகத் தன்​னம்​பிக்​கை​யுடன் இருந்​தேன்.

பத்​தாண்​டு​கள் கழித்​து, பிரின்​ஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் ஓர் ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான ஊக்​கத்​தொகைக்​குப் புத்​தகம் ஒன்றை எழுத​விருந்​தேன். முறைப்​படி டூயி மற்​றும் அலங்​காரநடை தொடர்​பாக அப்​போது புத்​தகம் எழுத வேண்​டிய நான் அந்​தத் திட்​டத்​தைத் தள்​ளிப்​போட்​டு​விட்டு மாத்​தநஸ்​பாமை மிக​வும் கவர்ந்த டூயி​யின் மாணவரைப் பற்​றிய ஆராய்ச்​சி​யில் இறங்​கினேன்.

அம்​பேத்​கர் குறித்​துத் தொடக்​கத்​தில் நுனிப்​புல் மேய்​வது​போன்ற மேலோட்​ட​மான தேடலில் ஈடு​பட்​ட​போதே எனது அறி​வார்ந்த பாதை பலவிதங்​களில் மாறிப்​போ​யிருந்​தது; எனது வாழ்க்​கை​யும்​தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in