

சி.அண்ணாமலை பத்திரிகை அனுபவம் மிக்கவர். இலக்கியம், நாடகம் என தொடர்ந்து இயங்கி வருபவர். அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘அவதாரம்’ கதைகளின் எல்லா மையக் கதாபாத்திரங்களும் மனித உறவுகள் சார்ந்த ஒரு தெளிவைக் கோரி நிற்கின்றன.
‘அது பூஜா’ என்றொரு சிறுகதை. இதில், பக்கத்துவீட்டு இளம் தம்பதியினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பூஜா எனும் எட்டு வயது சிறுமி வருகிறாள். தம்பதியினரின் அலுவலக அதிகாரிகள் விருந்தினர்களாக வரும் நேரத்தில் அங்கு போகமுடியாத சூழல் ஏற்படுகிறது.