கவிதையில் ஒரு புது முயற்சி

கவிதையில் ஒரு புது முயற்சி
Updated on
1 min read

பலராலும் பார்க்​கப்​ப​டாத அல்​லது பார்த்​தும், பார்த்​ததை ஒப்​புக்​கொள்​ளாத ஒன்றே கவிஞனின் கரு​வாக அமை​யும். அந்த வரிசை​யில் கவிஞர் புன்​னகை பூ ஜெயக்​கு​மார் ‘அஞ்​சலக்​கா’ என்ற படிமத்​தால் தூய்​மைப் பணி​யாளர்​களும் மனிதர்​கள்​தான் என்​பதை நிலை​நாட்ட முயற்சி செய்​கிறார்.

அதன் பிர​திபலிப்பே ‘அஞ்​சலக்​கா’ கவிதைத்​தொகுப்​பு. இதில் 72 தலைப்​பு​களில் கவிதைகள் அமைந்​துள்​ளன. இத்தொகுப்பு தூய்​மைப் பணி​யாளர்​கள் சக மனிதர் என்​றில்லை சக உயி​ரினம் என்​றுகூட பொது​மக்​களிடையே தோன்​று​வ​தில்லை என்ற கசப்​பான உண்​மை​யைக் காட்​சிப்​படுத்​துகிறது.

ஆதர​வற்​றோருக்கு இயற்​கையே துணை என்​றாலும் சில நேரங்​களில் இயற்​கை​யும் அவர்​களைப் பார்க்க மறுத்து விடு​கிறது. எனினும் அவர்​கள் தங்​கள் வேலை​யைச் செய்​து​கொண்டே உள்​ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in