

‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்கிற தொடரை ஏற்கெனவே எழுதியிருந்தாலும், அதைத் தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.
உலக இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும் மனிதவளம், நிதி மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, உணர்ச்சி மேலாண்மை போன்ற பல கூறுகள் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்று விரிவாகப் பேசும் இந்நூல், இலக்கியத்தையும் மேலாண்மையையும் இணைக்கும் பாலமாக இருக்கும்.
சைமன் சினக் எழுதிய ‘ஸ்டார்ட் வித் ஒய்’ என்கிற நூலைப் படித்துவருகிறேன். எதற்காகச் செய்கிறோம் என்கிற நோக்கத்தை நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்கள் மனதிலும் நிலைநிறுத்துவதன் மூலம்தான் செம்மையாக ஒரு செயலைச் செய்துமுடிக்க முடியும்.
அந்த அடிப்படையில் செயல்பட்டவர்களே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தந்தவர்கள். பல்வேறு உதாரணங்களுடன் வெகுநேர்த்தியாக இவர் எழுதிய ‘தலைவர்கள் இறுதியில் உண்பார்கள்’ (லீடர்ஸ் ஈட் லாஸ்ட்) என்கிற ஆங்கில நூலை சமீபத்தில் படித்து முடித்தேன்.
மிகவும் அக்கறையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல்வேறு நிலைகளில் பணியாற்றும் மேலாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.