Published : 02 May 2015 10:38 AM
Last Updated : 02 May 2015 10:38 AM

சிவா டிரைலாஜி, ஓர் அழகான பயணம் - நடிகை ராதிகா

நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்வதே புத்தகங் கள்தான். குறிப்பிட்ட சில புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள், காலநிலைப் பதிவுகள் ஏற்படுத்தும் உணர்வுகளெல்லாம் இனம்புரியாத, வித்தியாசமான மனநிலைக்குக் கொண்டுபோகும். சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்பு எனக்குப் பழக்கமானதால் எவ்வளவு பெரிய புத்தகங்களையும் மிக எளிமையாக நெருங்கிக் குறிப்பிட்ட நாட்களில் வாசித்து முடித்துவிடுவேன்.

பயணங்கள் தொடங்கி எல்லா நேரங்களிலும் என்னிடம் ஏதாவது ஒரு புத்தகம் இருந்துகொண்டே இருக்கும். தற்போது படித்துவரும் புத்தகம் அமிஷ் திரிபாதி எழுதிய ‘சிவா டிரைலாஜி’. மூன்று பாகங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் முடிவுப் பக்கங்களை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சிவனை நர்த்தகர், போர் வீரர், நியாயம் தர்மம் பார்க்கும் எளிமையான நபர் என்று பல்வேறு கோணங்களில் இந்த நூல் பிரதிபலிக்கிறது. தன்னிடம் இருக்கும் திறமைகள் அவருக்கே தெரியாது. மக்கள் அவரது அபார ஆற்றலை உணர்ந்து எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதன் பரிமாணங்களையெல்லாம் இந்தப் புத்தகம் நேர்த்தியாகக் காட்சிப்படுத்திச் செல்கிறது.

அந்தக் காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பு, மருத்துவ முறைகள் பற்றியெல்லாம் இந்த ஆங்கிலப் புத்தகம் அழகாக எடுத்து வைக்கிறது. விரைவில் இரண்டாவது பாகத்தை முடித்துவிட்டு மூன்றாவது பாகத்தைத் தொடப்போகிறேன். இதை அடுத்து, சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் லீ குவான் யூ வாழ்க்கை குறித்த புத்தகத்தை வாங்கி யுள்ளேன். அடுத்த வாசிப்புப் பயணம் அதுதான்.

- ம. மோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x