நூல் நோக்கு: வண்டல் உலகத்துக்குள்...

நூல் நோக்கு: வண்டல் உலகத்துக்குள்...
Updated on
1 min read

மண் சார்ந்த வாழ்வுடன் பின்னணிப் பிணைந்தது வட்டார இலக்கியம். வட்டார இலக்கியங்கள் செழித்து வளராவிட்டால் ஒட்டுமொத்த நவீன இலக்கியமும் செறிவற்றுப் போகும்.

‘வண்டல்:தஞ்சை வட்டார எழுத்துக்கள்’ என்ற தலைப்பில் மாநில சாகித்திய அகாதெமியால் கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடத்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட பத்து ஆய்வுக் கட்டுரைகள் இந்த நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தக் கட்டுரைகள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் விவசாயம் சார்ந்த வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் புனைவெழுத்தை ‘வண்டல்’ இலக்கியம் என வரையறை செய்து, வண்டல் வாழ்க்கையை எழுதிவரும் படைப்பாளிகளின் படைப்புகளைத் திறனாய்வு செய்கின்றன.

இரண்டாம் பகுதியில் ‘நானும் என் எழுத்தும் படைப்பாளர் குரல்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் ஆறு முக்கிய வண்டல் எழுத்தாளர்களின் குறுங்கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவையும் இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு மதிப்புக் கூட்டுகின்றன.

வண்டல்: தஞ்சை வட்டார எழுத்துக்கள்

தொகுப்பு: இரா.காமராசு

விலை: ரூ. 115

வெளியீடு: சாகித்திய அகாடமி

குணா பில்டிங்ஸ், எண் 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை -18

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in