திருநெறியாறுதிருவரணார்நோஷன் பிரஸ்விலை ரூ.460தொடர்புக்கு:88254 80448.திருக்குறளைப் போல திருநெறியாறு என்ற ஈரடிச் செய்யுளைக் கொண்ட தொகுப்பு இது. இரண்டாயிரம் கருத்தாழமிக்க செய்யுள்களைக் கொண்ட இதில், பல எளிமையாக இருந்தாலும் விளக்கவுரை இருந்திருந்தால் இன்னும் சிறந்த வாசிப்பவனுபத்தைக் கொடுத்திருக்கும்.சுற்றுச்சூழல் கருத்துப் பேழைபேரா.என்.ரெங்கநாதன்பேரா.ஜி.எஸ்.விஜயலெட்சுமிசங்கப்பலகை வெளியீடுவிலை ரூ.200தொடர்புக்கு: 9361070077.சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. பல கட்டுரைகளில் அறிவியல் பூர்வமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிற தகவல்கள் வியப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன..ஆரோக்கியம் தரும் உணவு, உடற்பயிற்சி முறைகள்சி.எஸ்.தேவ்நாத்நர்மதா பதிப்பகம்விலை ரூ.100தொடர்புக்கு: 9840226661.உடல் ஆரோக்கியத்துக்கான உணவு முறைகள், உடற்பயிற்சிகளில் ஏற்படும் பலன்கள், உடல் எடையை எப்படிக் குறைப்பது உள்ளிட்ட விஷயங்களைக் கூறுகிறது.தமிழ் மொழியில் அன்பைக் குறிக்கும்77 சொற்களும் அவற்றின் விளக்கமும்மரு. தாமரை ஹரிபாபுமணிமேகலை பிரசுரம்விலை ரூ.150தொடர்புக்கு:9176451934.அன்பு என்ற சொல்லுக்கான இணைச் சொற்களை எடுத்து அவை பற்றிய தனது கருத்துகளை இந்நூலில் விளக்கி இருக்கிறார், ஆசிரியர்..நடிக்கலாம் வாங்கசிறுவர் நாடகங்கள்முனைவர் தேவி நாச்சியப்பன்நிவேதிதா பதிப்பகம்விலை ரூ.130தொடர்புக்கு: 8939387296.மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடிப்பதற்கேற்ற நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.