

அகலிகை
பதிப்பாசிரியர்: முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98403 58301
அகலிகை புராணக் கதாபாத்திரத்தைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் அதிகம். இது குறித்த புதுமைப்பித்தன், ராஜாஜி, தமிழ் ஒளி எனப் பலரின் ஆக்கங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு வளமும் தமிழர் நலமும்
கோதையூர் மணியன்
செந்தமிழ் அறக்கட்டளை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 90250 58999
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வெளிவரும் ‘சாலியர் மல’ரில் எழுதப்பட்ட தலையங்கங்களின் தொகுப்பு நூல் இது. இந்தத் தலையங்கங்கள் வழி நாட்டுநடப்புகளைப் பற்றி எழுதியுள்ளார் கோதையூர் மணியன்.
ரோமன் போலன்ஸ்கி: துயரங்களில் மலரும் புன்னகை
ஜெகநாத் நடராஜன்
புலம் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 98406 03499
புகழ்பெற்ற பிரெஞ்சு சினிமா இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி குறித்த புத்தகம். அவரது பிறப்பு, அவரது ஆளுமை உருவானது, அவர் இயக்கிய படங்கள் என முழுமையாகப் பேசுகிறது இந்நூல்.
உன்னை நீயே உருவாக்கு
சிவபாரதி
வனிதா பதிப்பகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 044 42070663
தன்னம்பிக்கையை
உண்டாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. உதாரண சம்பவங்களுடன் ஆளுமையை உருவாக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
சாமான்யனின் சந்தேகங்கள் பாகம்-1
தேனி மு.சுப்பிரமணி
அறம் பதிப்பகம்
விலை: ரூ.370
தொடர்புக்கு: 91507 24997
சிபில் ஸ்கோர் என்பது என்ன, புயல் கூண்டு எச்சரிக்கை என்றால் என்ன என்பன போன்ற அடிக்கடி நம் காதுகளில் விழும் கேள்விகளுக்கான பதில்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஆத்தூர் விவசாயி
டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
பி.எஸ்.சிவசுப்பிரமணியம்
பொன்சொர்ணா பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 94428 34236
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்றுள்ளார். தன் அமெரிக்க அனுபவத்தை டைரியாக எழுதியதன் வடிவமே இந்நூல்.
மடியேந்தும் நிலங்கள்
அய்யனார் ஈடாடி
அகநி வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 944436042
‘கோடரியோடு வந்தவனுக்கு/அட்சதை தூவுகின்றன/உச்சிக் கிளைகள்’ என்பது போன்ற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. கிராமத்துப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
உப்பு ரொட்டி
பொன்.பிரபாகரன்
தட்டான் பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 73393 48514
இலங்கைத் தமிழ்க் கவிதையின் பண்புடன் வெளிப்பட்டுள்ள கவிதைகள் இவை. காதல், போர்ச் சூழல் எனப் பல கவிதைகள் அனுபவத்தில் விளைந்துள்ளன.
உண்மை தேடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு...
ஜாநிசிவம்
நான்மிகம் வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: 98414 96549
இஸ்லாம் உணர்த்தும் உண்மையை நூலாசிரியர் இதில் கூறியுள்ளார். அழகான தமிழில் இஸ்லாம் கருத்துகளை இதில் பகிர்ந்துள்ளார்.
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
சி.வி.சிவராமகிருஷ்ண சர்மா
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 98402 26661
கோயில் பிரதிஷ்டை, ஆகம விதிகள், பிரசாத விநியோகம் எனப் பல பொருள்கள் குறித்து இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.