

சீவக சிந்தாமணி
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 91-8148066645
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் உரைநடை வடிவம் இது. திருத்தக்கத்தேவர் இயற்றிய இந்த நூல் சீவகனின் கதையை நாவல் போல கூறுகிறது.
தமிழகத்தின் தியாகச் சுடர்கள்
எஸ்.கே.கார்வேந்தன்
குமரன் பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044 24353742
இந்திய விடுதலைக்குப் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களைப் பற்றிய நூல் இது. தெரிந்த பெயர்களுக்கு இடையில் எம்.குப்புசாமி போன்ற அறியாத பெயர்களையும் நூலில் காண
முடிகிறது.
சுவர்கள்
என்.சிவராமன்
போதிவனம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9841450437
என்.சிவராமனின் இந்தக் கட்டுரைகள் நவீன மாற்றத்தின் பல பாதகமான விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. ஜோஷ் வண்டேலு நாவலைத் தமிழில் அபாயம் என்கிற பெயரில் மொழிபெயர்த்தவர்
சிவராமன்.
பிறழ்வி
அன்புத்தோழி ஜெயஸ்ரீ
கடல் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 97890 09666
பெண் என்கிற நிலையில் இருந்து எழுதப்பட்ட கவிதைகள் உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்பட்டுள்ளன. இயற்கையையும் குழந்தை மனத்துடன் கவிதைகள் வியக்கின்றன.
மனிதனும் தெய்வமாகலாம்
வீர.உலகநாதன்
சாந்தா பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9962388550
வாழ்க்கை குறித்து நமக்கு எழும் கேள்விகள் உண்மையில் குழப்பமானவைதாம். அந்தக் கேள்விகளுக்கான விடையை இந்த நூலின் வழி வீர.உலகநாதன் தர முயன்றுள்ளார்.