ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு: சிறந்த கட்டிடக்கலை என ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு: சிறந்த கட்டிடக்கலை என ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: தொழில​திபரும் மஹிந்​திரா குழு​மத்​தின் தலை​வரு​மான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்​தானில் உள்ள 'சந்த் பவோரி' எனும் பண்​டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்​களில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார். அது அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது.

சந்த் பவோரி​யின் கண்​கவர் புகைப்​படங்​களை பகிர்ந்து கொண்​டுள்ள ஆனந்த் மஹிந்​தி​ரா, உலகெங்​கிலும் இருந்து வரும் சுற்​றுலாப் பயணி​கள் ராஜஸ்​தானின் வானுயர்ந்த கோட்​டைகளை​யும் அரண்​மனை​களை​யும் காண அங்கே திரள்​கின்​றனர். என்​றாலும், 'சந்த் பவோரி' மட்​டும் அவற்​றுக்கு முற்​றி​லும் மாறு​பட்ட வகை​யில் - அதாவது, பூமிக்கு அடி​யில் ஆழமாகச் செல்​வதன் மூலம் - தனித்து நிற்​ப​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்​தப் பிராந்​தி​யத்​தின் மிகச் சிறந்த கட்​டிடக்​கலை படைப்​பு​களில் ஒன்​றாக இதை வர்​ணித்த மஹிந்தி​ரா, அதன் அழகிய தோற்​றம் மற்​றும் வடிவ​மைப்பை வெகுவாகப் பாராட்​டி​யுள்​ளார். ஜெய்ப்​பூரில் இருந்து சுமார் 95 கி.மீ. தொலை​வில் உள்ள அபானேரி கிராமத்​தில் சந்த் பவோரி அமைந்​துள்​ளது. உலகின் மிக ஆழமான மற்​றும் மிகப்​பெரிய படிக்​கிணறுகளில் ஒன்​றாக இது கருதப்படுகிறது.

தரைமட்​டத்​தில் இருந்து சுமார் 30 மீட்​டர் ஆழத்​துக்கு செல்லும் இக்​கட்​டமைப்​பு, 13 அடுக்​கு​களாகப் பரவியுள்ளது. இவை சுமார் 3,500 குறுகிய, மிகத் துல்லியமான படிகட்​டு​களால் ஒன்​றோ டொன்று இணைக்கப்​பட்டுள்​ளன. மேலிருந்து பார்க் கும்​போது, தலைகீழாக இருக்​கும் ஒரு பிரமிடு போன்ற வியக்கத்தக்கவடி​வில் இது உள்​ளது.

நிகும்ப் ராஜபுத்​திர வம்​சத்​தைச் சேர்ந்த மன்​ன​ரான ராஜா சந்​தா​வின் ஆட்​சி​யில் அதாவது 8 மற்​றும் 9-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்​பட்ட காலத்​தில், இது கட்டப்பட்​ட​தாக வரலாற்று அறிஞர்​கள் கருதுகின்​றனர். அம்​மன்​னரின் பெயரையே இந்​தக் கட்​டமைப்பு தாங்கியுள்​ளது. ராஜஸ்​தானின் வறட்சி காலங்​களில் தண்ணீர் தட்​டுப்​பாடு ஏற்​படும் நிலை​யில் மழைநீரை சேமிக்​கும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், வறட்சி காலங்​களில் உள்​ளூர் மக்​களுக்கு தொடர்ச்​சி​யான தண்​ணீர் விநி​யோகம்​ உறு​தி செய்யப்பட்டது.

ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு: சிறந்த கட்டிடக்கலை என ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
“அதிமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது திமுக” - பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in