பிரபல சமையல் கலைஞர் தாமுவின் பணிகளும் சாதனைகளும்

பிரபல சமையல் கலைஞர் தாமுவின் பணிகளும் சாதனைகளும்
Updated on: 
1 min read

சென்னை: பிரபல சமையல் கலைஞர் தாமு உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலமானார். அவருக்கு வயது 72.

தாமோதரன் கோதண்​டராமன் என்ற செஃப் தாமு கடந்த 1954-ம் ஆண்டு செப்​டம்​பர் 3-ம் தேதி சென்​னை​யில் பிறந்​தார். சென்னை தரமணி​யில் உள்ள உணவக மேலாண்மை கல்வி நிறு​வனத்​தில் பட்​டயப்​படிப்பை முடித்​துள்​ளார். 1977-ல் தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக் கழகத்​தில் மேலாண்​மைப் பயிற்​சி​யாளராக பணி​யைத் தொடங்​கினார்.

உணவக மேலாண்மை மற்​றும் சமையல் தொழில்​நுட்​பத்​தில் முனைவர் பட்​டம் பெற்ற முதல் இந்​திய சமையல் கலைஞர் என்ற பெரு​மைக்​குரிய​வர்.

தொலைக்​காட்​சிகளில் சமையல் நிகழ்ச்​சிகள் வாயி​லாக மக்களுக்கு அறி​முக​மாகி​யிருந்​தா​லும், தமிழக அரசின் மதிய உணவுத் திட்​டத்​திலும் பங்​களித்​துள்​ளார்.

மதிய உணவுத் திட்​டத்​தின் தரத்தை மேம்​படுத்​த, எட்டு வகை​யான சாதங்​கள், ஆறு வகை முட்டை உணவு​களை அறி​முகப்​படுத்த உதவியுள்​ளார்.

மேலும் தமிழகத்​தின் 32 மாவட்​டங்​களில் 1.40 லட்​சம் சத்​துணவுப் பணி​யாளர்​களுக்​கும் 13 மாவட்​டங்​களில் பள்​ளிக் கல்​வித்​துறை​யின் கீழ் செயல்​படும் மாணவியர் விடுதிகளின்​ சமையல் பணி​யாளர்​களுக்​கும் பயிற்சி வழங்​கி​யுள்​ளார்.

2010, டிச.22-ம் தேதி சென்​னை​யில் தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்​கள், 12 விநாடிகள் சமையல் செய்து, கின்​னஸ் சாதனை படைத்​தார்.

2025-ம் ஆண்டு மத்​திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்​கிக் கவுர​வித்​தது. சில திரைப்​படங்​களில் சமையல் கலைஞராகவும் நடித்​துள்​ளார்.

கடந்த சில நாட்​களாக உடல்​நலக் குறைவு காரண​மாக, சென்​னை​யில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார்.

அவரது மறைவுக்கு முதல்​வர் விஜய், அரசியல் கட்சியினர், திரை​யுல​கினர் உள்ளிட்ட பலர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

பிரபல சமையல் கலைஞர் தாமுவின் பணிகளும் சாதனைகளும்
மதுரவாயலில் மேம்பாலப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களை திருடிய 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in