மாற்றுத் திறனாளி குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் பிவிஎஸ்என் மூர்த்தி மையம்

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்படும் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்படும் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்.

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக செயல்​பட்டு வரும் பிவிஎஸ்​என் மூர்த்தி சிறப்பு குழந்​தைகள் மையம், நுண்​ணறி​வுக் குறை​பாடு மற்​றும் ஆட்​டிசம் பாதிப்​புள்ள குழந்​தைகளுக்​காக அர்ப்​பணிப்​புடன் சேவை செய்​து, அவர்​களின் கல்வி மற்​றும் சுய​சார்பு வளர்ச்​சிக்கு முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது.

சென்னை மேற்கு மாம்​பலத்​தில் 70 ஆண்​டு​களுக்​கும் மேலாக சமூகப் பணி​களுக்கு பெயர்​பெற்ற பல்​நோக்கு மருத்​து​வ​மனை​யான பொது சுகா​தார மையம் (பப்​ளிக் ஹெல்த் சென்​டர்), மாற்றுத் திறனாளிக் குழந்​தைகளுக்​காக மேற்கு மாம்​பலம் தம்​பையா சாலை​யில் பிவிஎஸ்​என் மூர்த்தி சிறப்பு குழந்​தைகள் மையத்தை நடத்தி வரு​கிறது.

இந்த மையம் நுண்​ணறி​வுக் குறை​பாடு, ஆட்​சிசம் பாதிப்​பு, ஹைப்​பர் ஆக்​டீவ், கவனக்​குறைவு, டவுன் சிண்ட்​ரோம் உள்​ளிட்​ட​வற்​றால் பாதிக்​கப்​பட்ட மாற்றுத் திறனாளிக் குழந்​தைகளுக்கு திறன் பயிற்சி அளித்​து, 40 ஆண்​டு​களுக்கு மேலாக சேவை செய்து வரு​கிறது. இம்​மை​யத்​தின் முதல்​வர் பத்​மினி மற்​றும் நிர்​வாகி கணேசன் ஆகியோர் கூறிய​தாவது:

2011 கணக்​கெடுப்​பின்​படி இந்​தி​யா​வில் 2.68 கோடி மாற்றுத் திறனாளி​கள் உள்​ளனர். இவர்​களில் 6 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் 20.42 லட்​சம் பேர். அதே​போல, 5 முதல் 19 வயதுக்​குட்​பட்ட மாற்​றுத் திற​னாளி குழந்​தைகளில் 61 சதவீதம் மட்​டுமே கல்வி பயின்று வரு​கின்​றனர். 27 சதவீதம் பேர் பள்​ளிக்​குச் சென்​றதே இல்​லை.

குறிப்​பாக, நுண்​ணறி​வுத் திறன் குறை​பாடுள்ள குழந்​தைகளில் 50 சதவீதம் பேர் ஒரு​போதும் பள்​ளிக்​குச் சென்​ற​தில்​லை. பிவிஎஸ்​என் மூர்த்தி சிறப்பு குழந்​தைகள் மையம், ஒவ்​வொரு மாற்றுத் திறனாளி குழந்​தை​யின் திறன்​கள் மற்​றும் தேவை​களுக்கு ஏற்ப தனிப்​பட்ட கல்​வித் திட்​டங்​களை வடிவ​மைத்​து, கட்​டமைக்​கப்​பட்ட சிறப்​புக் கல்வி முறையை செயல்​படுத்தி வரு​கிறது.

இங்கு பயிலும் குழந்​தைகள் தகவல் தொடர்​பு, சமூக மற்​றும் நடத்தை சார்ந்த திறன்​களை மேம்​படுத்​திக் கொள்​கின்​றனர். அதே​போல, கழிப்​பறை பயிற்​சி, சுய கவனிப்​பு, அன்​றாட பழக்​கவழக்க மேலாண்மை போன்ற அத்​தி​யா​வசிய வாழ்க்​கைத் திறன்​களும் கற்​பிக்​கப்​படு​கின்​றன.

மேலும், தேசிய திறந்​தவெளி பள்ளி நிறு​வனத் தேர்​வு​களுக்கு மாணவர்​களைத் தயார்​படுத்​து​வதுடன், எதிர்​காலத்​தில் அவர்​கள் சுய​சார்​புடன் வாழ உதவும் வகை​யில் தொழிற்​கல்​விப் பயிற்​சிகளுக்​கும் வழி​வகை செய்​யப்​படு​கிறது. இங்​கு பயிலும் மாற்றுத் திறனாளிக் குழந்​தைகளின் நீண்​ட​கால சவால்​களைக் குறைக்க, ஆரம்​ப​காலத்​தில் இருந்தே தொடர்ச்​சி​யான மதிப்​பீடு​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

மேலும், இக்​குழந்​தைகளுக்கு அரசு சலுகைகள் மற்​றும் உரிமை​களைப் பெற​வும் உதவு​கிறோம். தற்​போது இந்த மையத்​தில் 58 குழந்​தைகள் படித்து வரு​கின்​றனர்.

இடவச​திப் பற்​றாக்​குறை​யால் அதிக எண்​ணிக்​கையி​லான குழந்​தைகளை சேர்க்க இயலா​விட்​டாலும், சேவை மனப்​பான்​மை​யுடன் கட்​ட​ணமின்றி வழி​காட்​டு​தல் மற்​றும் தொழில்​முறை உதவி​களை தொடர்ந்​து வழங்​கி வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்படும் பிவிஎஸ்என் மூர்த்தி சிறப்பு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகள்.</p></div>
செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in