7,500 ஆண்டுக்கு முன் முருகன் பெயர் ‘அரண்’ - சிந்து சமவெளி ஆய்வாளர் புதிய தகவல்

(மேலிருந்து வலமாக) வேல் குறியீடு, முயல் குறியீடு, சேவல் குறியீடு, வரிப்புலி குறியீடு, வரையாடு குறியீடு, யானை குறியீடு.

(மேலிருந்து வலமாக) வேல் குறியீடு, முயல் குறியீடு, சேவல் குறியீடு, வரிப்புலி குறியீடு, வரையாடு குறியீடு, யானை குறியீடு.

Updated on
1 min read

திருச்சி: 7,500 ஆண்டுகளுக்கு முன் வேலாயுதன் என்ற அழகன் முருகனின் சிறப்பு பெயர் ‘அரண்’ என்று சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப் பெற்ற ஆறு முத்திரைகளில் வேல் வடிவத்தில் ரண், முயல் வடிவத்தில் ரண், ஒத்தக்கோடு நந்தி மற்றும் பரமஞான குறியீட்டுடன் ரண் சேவல், கொற்றவை உருவத்துடன் ரணருசீ, வரையாடு உருவத்துடன் ரணண், யானையின் உருவத்துடன் ரணண் ஆகிய செந்தமிழ் சொற்கள் உள்ளன.

அவற்றில் ரண் என்பது ஒரு பொதுவான சொல்லாக இருக்கிறது. ர, ல, ய ஆகிய மூன்று எழுத்துகளுக்கு முன் அ, உ, இ ஆகிய மூன்று சுட்டெழுத்துக்கள் வரும் என்பது செந்தமிழ் இலக்கண விதி. அந்த விதியின்படி, ரண் என்ற சொல் அரண் என்று படிக்கப் பெறுகிறது.

அரண் என்ற சொல்லுக்கு கோட்டை, பாதுகாப்பு, காவல், காவற்காடு, வேலாயுதம், அழகு என்று தமிழ் அகராதியின் துணையுடன் பொருள் அறியமுடிகிறது.

மெய்யியலில் ஞானம் என்பது ‘அரச இலை போல அகண்டும், கூர்மையாகவும் இருக்க வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது வேல் குறியீடு. இக்குறியீடு முருகனின் ஞானத்தை குறிப்பிடுவது. குறியீடுகளில் முயல் என்பது முருகனின் போர் குணத்தையும், சேவல் என்பது காவல் என்பதையும் குறிக்கும்.

இதுவே சேவல் கொடியோன் என்றுரைப்பது. வரிப்புலியை வாகனமாக கொண்ட, வெற்றிக்கு அடையாளமானவள் கொற்றவை என்ற உமையம்மை. இது உமையம்மை மைந்தன் (அ) வெற்றிக்குமாரன் என்று பறைசாற்றுவது.

வரையாடு என்பது மலையாடு. இது மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சித் தலைவன் என்று முழங்குவது. யானை என்பது யானை வென்றி, அதாவது ஒரு யானை பிறிதொன்றோடு போரிட்டு வெற்றி பெறுதலை கூறும் புறத்துறை முருகனின் பெயராகும்.

இவற்றின் மூலம் கடந்த 7,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகச் சான்றுகளின் வாயிலாக வேலாயுதன் அல்லது அழகன் என்னும் முரு கனின் சிறப்புப் பெயர் ‘அரண்’ என்ற செய்தி தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>(மேலிருந்து வலமாக) வேல் குறியீடு, முயல் குறியீடு, சேவல் குறியீடு, வரிப்புலி குறியீடு, வரையாடு குறியீடு, யானை குறியீடு.</p></div>
சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in