கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவிக்கு மறுவாழ்வு

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவிக்கு மறுவாழ்வு
Updated on
1 min read

சென்னை: கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்​துவ மாண​வி​யின் உயிரை மருத்​து​வர்​கள் காப்​பாற்​றி​யுள்​ளனர்.

சென்னை, கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில், திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் படிக்​கும் சின்​பனி என்ற மாணவிக்​கு, அதிநவீன நரம்​பியல் சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டு, மாண​வி​யின் உயிர் காப்​பாற்​றப்​பட்​டுள்​ளது.

இதுபற்றி தகவல் அறிந்த சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், மருத்​து​வ​மனைக்கு நேற்று சென்று மாண​வி​யிடம் நலம் விசா​ரித்​து, சிகிச்சை அளித்த மருத்​துவ குழு​வினரைப் பாராட்​டி​னார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3-ம் ஆண்டு படிக்​கும் மாணவி சின்​பனி (21)-க்கு, கடந்த டிச.15-ம் தேதி கடுமை​யான தலை​வலி ஏற்​பட்​டுள்​ளது. மேலும், பார்வை திறனும் குறைந்​தது.

திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, திருச்சி தனி​யார் மருத்​து​வ​மனை, திருச்சி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. பின்​னர், உயர் சிகிச்​சைக்​காக கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் டிச.18-ம் தேதி மாணவி அனு​ம​திக்​கப்​பட்​டார்.

பரிசோதனை​யில் மாணவிக்கு மூளை​யில் ரத்​த​நாள சிதை​வால், ரத்த கசிவு இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. உடனே, ஆனிக்ஸ் என்​னும் நவீன திர​வம் மூலம் ரத்​தக் கசிவை தடுக்​கும் எம்​போலை சேஷன் சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது.

சிகிச்​சைக்​குப் பிறகு மாணவிக்கு திடீரென்று வலிப்​பு, மயக்​கம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஸ்கேன் பரிசோதனை​யில் மூளை​யின் பிற பகு​தி​களி​லும் ரத்​தக் கசிவு இருப்​பது தெரிய​வந்​தது. உடனடி​யாக அவருக்கு மண்டை ஓடு அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டு, ரத்த உறைவு அகற்​றப்​பட்​டது.

மாணவி 21 நாள் வெண்​டிலேட்​டரில் இருந்​தார். தற்​போது முழு சுயநினை​வுடன் மற்​றவர்​களைப் பார்க்​கும் திறனும், அடை​யாளம் கண்டு அவர்​களு​டன் பேசும் திறனை​யும் பெற்​றிருக்​கிறார்.

மருத்​து​வத்​துறை வரலாற்​றில் இந்த சாதனை சாதா​ரணமல்ல. இந்த சிகிச்சை தனி​யார் மருத்​து​வ​மனை​களில் செய்​வதற்கு ரூ.15 லட்​சத்​துக்​கும் மேல் செல​வாகும்.

அமைச்சர் பா​ராட்​டு​: முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்டு திட்​டத்​தின்​கீழ், இந்த சிகிச்​சை்் இலவச​மாக செய்​து, மாண​வி​யின் உயிர் காப்​பாற்​றப்​பட்​டுள்​ளது. இதற்கு காரண​மான மருத்​து​வர்​களை​யும், செவிலியர்​களை​யும் பா​ராட்​டு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் பார்த்​த​சா​ர​தி, மருத்​து​வ​மனை நோடல் அதி​காரி ரமேஷ், நரம்​பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ்​பாபு, ஊடுரு​வல் கதிரியக்க நிபுணர் பெரியகருப்​பன், மயக்க மருந்து நிபுணர் கார்த்​தி​கேயன் மற்​றும் மருத்​துவ குழு​வினர் உடன் இருந்​தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in