அமெரிக்காவில் வேலை இழந்த பிறகு டீ கடை நடத்தும் இந்திய இன்ஜினீயர்!

பிர​பாகர் பிர​சாத்

பிர​பாகர் பிர​சாத்

Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வில் கார்ப்​பரேட் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்ட இந்​திய இன்​ஜினீயர் வெற்​றிகர​மாக டீ கடையை நடத்தி வரு​கிறார். அவரது கடை​யில் ஒரு டீ ரூ.735-க்கு விற்​பனை செய்யப்படு​கிறது.

பிஹார் தலைநகர் பாட்னா அரு​கே​யுள்ள பார் என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிர​பாகர் பிர​சாத். ஐஐடி மாணவ​ரான அவர் கடந்த 2014-ம் ஆண்​டில் எம்​பிஏ படிப்​ப​தற்​காக அமெரிக்கா​வுக்கு சென்றார். சுமார் 10 ஆண்​டு​களாக அமெரிக்​கா​வின் பல்​வேறு கார்ப்​பரேட் நிறுவனங்களில் பணி​யாற்​றி​னார்.

கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அவர் பணி​யாற்​றிய கார்ப்​பரேட் நிறு​வனத்​தில் பலர் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதில் பிர​பாகர் பிரசாத்​தும் வேலை​யிழந்​தார்.

அடுத்த பணி​யைத் தேடு​வதற்​குப் பதிலாக அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் டீ கடையை தொடங்​கி​னார். இந்த டீ கடை தற்போது அமெரிக்​க​ வாழ் இந்தியர்கள் மத்​தி​யில் பிரபல​மாகி உள்ளது. பிர​பாகரின் கடையில் ஒரு டீ ரூ.735-க்​கும், போஹா என்ற சிற்​றுண்டி ரூ.1,512-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

தனது பயணம் குறித்து பிர​பாகர் பிர​சாத் கூறிய​தாவது: பிஹாரில் கங்கை நதிக்​கரை​யில் உள்ள சிறிய கிராமத்​தில் பிறந்​தேன். எனது குடும்​பம் மிக​வும் ஏழ்​மை​யான நிலை​யில் இருந்​தது. எனது தந்தை அடுத்​தடுத்து பல்​வேறு தொழில்​களை நடத்​தி​னார்.

ஆனால், அவரால் பொருளா​தார தன்​னிறைவை எட்ட முடியவில்லை. நான் இந்தி மொழி வழி பள்​ளி​யில் கல்வி பயின்றேன். சில ஆண்​டு​களுக்கு பிறகு எனது குடும்​பம் போபாலுக்கு இடம்​ பெயர்ந்​தது. அங்கு சிபிஎஸ்இ பள்​ளி​யில் சேர்ந்தேன். எனக்கு இந்தி மட்​டுமே நன்​றாக தெரி​யும்.

போதிய ஆங்​கில அறிவு இல்​லாத காரணத்​தால் சக மாணவர்​கள் கேலி, கிண்​டல் செய்​தனர். எதை​யும் கண்​டு​கொள்​ளாமல் மிக​வும் கடின​மாக படித்​தேன். ஐஐடி கல்வி நிறு​வனத்​தில் சேர்ந்து இன்ஜினீயர் பட்​டம் பெற்​றேன்.

சாப்ட்​வேர் துறை​யில் எனக்கு பெரி​தாக ஈடு​பாடு இல்​லை. உடற்​ப​யிற்சி கூடம் சார்ந்த பணிகளில் ஆர்​வம் செலுத்​தினேன். இதற்​காக மும்​பை​யில் குடியேறினேன். கடந்த 2014-ம் ஆண்​டில் அமெரிக்​கா​வின் டெக்சாஸ் மாகாணத்​துக்கு சென்​றேன். பல்​வேறு கார்ப்​பரேட் நிறுவனங்​களில் பணி​யாற்​றினேன்.

பல முறை வேலை​யில் இருந்து நீக்​கப்​பட்​டேன். கடைசி​யாக கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டேன். அதோடு கார்ப்​பரேட் பணியை முழு​மை​யாக துறந்​தேன். சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்​தேன்.

தற்​போது வெற்றிகர​மாக டீ கடையை நடத்தி வரு​கிறேன். கார்ப்​பரேட் நிறுவனங்​களின் சி.இ.ஓ​-வாக நான் உயர்ந்த பதவியை அடையவில்​லை. ஆனால் சாய்​ வாலா என்ற மிகப்​பெரிய பட்​டம் கிடைத்​திருக்​கிறது. இது மன நிறை​வைத் தரு​கிறது. இவ்​வாறு பிரபாகர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>பிர​பாகர் பிர​சாத்</p></div>
நிதிஷ் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் இணைந்தார் - துணை முதல்வராக்க கட்சியினர் ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in