

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் தரந்தரன் பகுதியில் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பின் போது மண்டபத்துக்கு வந்த மணமகள் மீது மணமகன் வீட்டார் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்தனர்.
அப்போது சுமார் ரூ.8.5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மணமகள் மீது மணமகன் வீட்டார் இறைத்ததாக சிலர் தெரிவித்தனர். ஆனால் சிலரோ ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான கரன்சி நோட்டுகள் மட்டுமே வாரியிறைக்கப்பட்டன என்று தெரிவித்தனர். இருந்தபோதும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஒருவர், “இது அவர்களுடைய சொந்தப் பயணம். அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் அதைச் செய்துள்ளனர். இதை குறை சொல்லக்கூடாது" என் பதிவிட்டுள்ளாார். மற்றொருவர், "இந்தப் பணத்தை இங்கு வாரி இறைப்பதை விட தேவைப்படுபவர்களுக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ கொடுத்து உதவியிருக்கலாம்" என்றார்.