மேட்டூர் காவிரி கரையில் அகழாய்வு: முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

மேட்டூர் காவிரி கரையில் அகழாய்வு: முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

மேட்டூர் காவிரி கரையில் அகழாய்வு: முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

Updated on
2 min read

மேட்டூர்: மேட்டூர் காவிரி கரையில் மேற்கொண்டு வரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு, முதுமக்கள் தாழி, கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தெலுங்கனூர், மாங்காடு பகுதிகள் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ளன. இப்பகுதி 1990 வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்பகுதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது அதிகளவிலான கல் வட்டங்கள் இருப்பதைக் காண முடியும். இவை உள்ளூர் மக்களால் பாண்டியன் திட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெலுங்கனூர், மாங்காடு பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் கண்டறியப்பட்டு அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழமையான பொருட்கள்.

பழமையான பொருட்கள்.

இதில் மனிதர்களின் எலும்புக் கூடுகள், அவர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, கத்திகள், ஈட்டிகள், பானை, கல்மணிகள், கோடாரி உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

இரும்பிலான எஃகு வாள், இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள காலத்துக்கு முற்பட்டது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த ‘அல்ட்ரா ஹைட்ரோ கார்பன்’ தொழில்நுட்பத்தை, தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியதற்கு சான்றாக இங்கு கண்டெடுக்கப்பட்ட எஃகு வாள் உள்ளது.

கடந்தாண்டு கண்டறியப்பட்ட பெரிய அளவிலான வாள் 3,600 ஆண்டுகள் பழமையானது என்பதால், அதன் காலத்தை ஒட்டி இருக்கும். ஆனால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக் கூடு.

மனித எலும்புக் கூடு.

இந்த பொருட்களின் காலம் எது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆய்வறிக்கை வந்த பிறகு தான் முழுமையான காலம் தெரியவரும், என்றனர்.

மேட்டூர் காவிரி கரையில் அகழாய்வு: முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

“குதிரை பேர விவகாரத்தில் தொகுதி மக்கள் கேள்வி எழுப்பினால் எம்எல்ஏக்கள் யோசிப்பார்கள்” - பெ.சண்முகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in