துபாயில் மனைவிக்காக ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்கும் கணவர்!

துபாயில் மனைவிக்காக ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்கும் கணவர்!
Updated on
1 min read

துபாய்: துபாயை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் சதீஷ் சன்பால் (40), மனைவிக்காக ஆண்டுதோறும் 3 கிலோ தங்கம் வாங்கி வருகிறார்.

மத்​திய பிரதேசத்​தின் ஜபல்​பூரை சேர்ந்​தவர் சதீஷ் சன்​பால் (40). எட்​டாம் வகுப்பு படிக்​கும்​போது வறுமை​ காரண​மாக பள்​ளிப் படிப்பை பாதி​யில் நிறுத்​தி​னார். அவரது அம்மா தனது வாழ்​நாள் சேமிப்​பான ரூ.50,000-ஐ மகனிடம் வழங்​கி​னார். இந்த பணத்தை மூலதன​மாக வைத்து சதீஷ் சன்​பால் மிக இளம் வயதில் துபாய்க்கு சென்​றார்.

முதலில் துபா​யில் ஒரு சிறிய மளிகை கடையை தொடங்​கி​னார். அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்​தது. பின்​னர் ரியல் எஸ்​டேட், ஓட்​டல், நிதி சேவை, ஊடகம் என பல்​வேறு துறை​களில் அடுத்தடுத்து கால் பதித்​தார். கடந்த 2018-ல் அனக்ஸ் ஹோல்​டிங் என்ற நிறு​வனத்தை தொடங்​கி​னார். இது துபா​யின் முன்​னணி நிறு​வனங்​களில் ஒன்​றாக உரு​வெடுத்​திருக்​கிறது.

கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு பிரிட்​டனைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்​சாவளியை சேர்ந்த தபின்​டாவை, சதீஷ் சன்​பால் திரு​மணம் செய்து கொண்​டார். கடந்த 2024-ம் ஆண்டு இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்​தது. துபா​யில் 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா அடுக்​கு​மாடி கட்​டிடத்​தில் சதீஷ் சன்​பால் தனது குடும்​பத்​துடன் வசித்து வரு​கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.8,000 கோடி​யாக மதிப்​பிடப்​பட்டு உள்​ளது.

நெட்​பிளிக்ஸ் சார்​பில் ‘டெஸி பிளிங்' என்ற பெயரில் விரை​வில் ஒளிபரப்​பாக உள்ள நிகழ்ச்​சி​யில் சதீஷ் சன்​பால் தனது மனைவியுடன் பங்​கேற்று உள்​ளார். துபா​யில் வாழும் இந்​திய வம்சாவளி தொழில​திபர்​களின் வாழ்க்​கையை அடிப்​படை​யாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி தயாரிக்​கப்​பட்டு உள்​ளது. இதன் முன்னோட்ட வீடியோ அண்​மை​யில் வெளி​யானது.

இதில் சதீஷ் சன்​பாலின் மனைவி தபின்டா கூறும்​போது, “நான் முஸ்​லிம், எனது கணவர் இந்​து. எங்​களின் திரு​மணத்​துக்கு எனது குடும்​பத்​தினர் ஆரம்​பத்​தில் சம்​மதம் தெரிவிக்​க​வில்​லை. ஆனால் சதீஷின் திறமையை பார்த்து எனது குடும்​பத்​தினரின் மனநிலை மாறியது. எனது கணவர் என் மீது மிகுந்த அன்பு வைத்​திருக்​கிறார். எனக்​காக அவர் ஆண்​டு​தோறும் 3 கிலோ தங்​கம் வாங்கி தரு​கிறார்” என்றார்.

சதீஷ் சன்​பால் கூறும்​போது,”பணம் என்​பது கடவுள் கிடை​யாது. ஆனால் கடவுளுக்கு இணை​யாக பணம் மதிக்​கப்​படு​கிறது” என்றார்.

தற்​போதைய சந்தை நில​வரப்​படி ஒரு கிலோ தங்​கம் விலை ரூ.1.5 கோடி​யாக உள்​ளது. தொழில​திபர் சதீஷ் சன்​பால் தனது மனைவிக்​காக ஆண்​டுக்கு 3 கிலோ தங்​கத்தை வாங்கி கொடுக்கிறார். இதன்​படி அவர் ஆண்​டுக்கு ரூ.4.5 கோடியை செலவிடு​கிறார். தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சதீஷ் சன்​பாலின் மனைவி தபின்​டா​வின் வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாகி வருகிறது.

துபாயில் மனைவிக்காக ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்கும் கணவர்!
குழப்பத்தில் ‘வாசனை’ தலைவர் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in